மரபுசாரா மின் உற்பத்தி திட்டத்தின் மூலமாக மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஐநா காலநிலை மாற்றம் மாநாட்டில் 40 நாடுகள் அனல் மின் உற்பத்தி நிலையங்களை படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று என்று கூறினார்.
மேலும் ஓடந்துறை ஊராட்சியில் காற்றாலை மின் திட்டத்தை செயல்படுத்தியதால் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மிச்சமாகும் 2 லட்சம் யூனிட் மின்சாரத்தை பெற்று 5 லட்சம் வரை வருமானம் கிடைக்கின்றது. இது போன்ற அனைத்து ஊராட்சிகளிலும் சராசரியாக 2 முதல் 5 கோடி வரை இந்தத் திட்டத்தை செயல் படுத்துவதன் மூலமாக தமிழ் நாடு தன்னிறைவு அடைய முடியும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.