மேற்கு வங்காளத்தில் வாட் வரியை குறைக்கக்கோரி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் நிலவியது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை குறைத்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி பல மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தன. இதனால் பெட்ரோல் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் சில மாநிலங்களில் வரி குறைக்கப்படவில்லை.
இதேபோல் மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரி குறைக்க படாததால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக வினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். மத்திய அவென்யூவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொடங்கி இந்தப் போராட்டம் எஸ்ப்லனேடு மெட்ரோ ரயில் நிலையம் வரை பேரணியாக நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பேரணி தொடங்கியபோது போலீசார் பாஜக அலுவலகம் முன்பு பேரிகார்டுகளை பயன்படுத்தி பேரணியை தடுத்த முற்பட்டனர். இதனால் பாஜகவினர் மற்றும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.