Categories
மாநில செய்திகள்

8,000 கனஅடி நீர் திறப்பு…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து 8000கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 103.70 அடியை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 6.757 கன அடியாக உள்ள நிலையில் பவானி ஆற்றில் 6,500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |