Categories
மாநில செய்திகள்

வெள்ள பாதிப்பை உணர்ந்து…. அரசு முழுமையாக செயல்பட வேண்டும்…. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கோரிக்கை…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பருவமழை தொடக்கத்திலேயே சென்னை மாநகரமே குளம்போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து துயரப் படுவதே பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கிறது.

இதையடுத்து அதிமுக அரசு மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளை இப்போதைய ஆட்சியாளர்களும் அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் வெள்ள நீர் பெரிய அளவில் வரும் வாய்ப்பு உள்ளதால் அவற்றின் கரையோரப் பகுதிகளிலும், தண்ணீர் தேங்கி உள்ள மற்ற பகுதிகளையும் சேர்ந்த மக்களும் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை துரிதப்படுத்த வேண்டும்.

மழையின் தீவிரத்தை புரிந்துகொண்டு அரசு எந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். வருமுன் காப்பதே மக்களை காக்க நம்மிடம் உள்ள ஒரே வழி. அதைப் புரிந்து கொண்டு தமிழக அரசு விவேகத்துடனும், விரைந்தும் பணியாற்ற வேண்டும். இதுவே எங்கள் வலியுறுத்தல் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |