கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாததால் திருமணத்திற்கு சென்ற பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீ நெடுஞ்சேரி-பவழங்குடி கிராமத்திற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 17 கோடி செலவில் தடுப்பணை சுவர் மட்டும் கட்டப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி உபரி நீர் கரைபுரண்டு செல்கிறது.
இந்த நிலையில் பவழங்குடி கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக ஸ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தை உறவுக்காரர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் சீர்வரிசை சாமான்களை எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.