Categories
மாநில செய்திகள்

அடடே…! 56,000பேருக்கு அரசு வேலை…. விரைவில் ஸ்டாலின் ஒப்புதல் …!!

செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, குறிப்பாக மின்சார துறையை பொருத்தவரை பருவமழை காலங்களை எதிர்கொள்வதற்காக எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டு சீரான மின்சாரம் வழங்குவதற்காக அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக 1 லட்சம் மின் கம்பங்கள் தற்போது தயாராக இருக்கிறது. அதற்கு தேவையான கம்பிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் தேவையான அளவிற்கு கொள்முதல் செய்வதற்கு வாரியம் தயாராக உள்ளது. எனவே வரக்கூடிய பருவமழை காலத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் மக்களுக்கு சீரான மின் வினியோகம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் 56,000காலி பல இடங்களில் உள்ளதாக செந்தில்பாலாஜி கூறியுள்ளார். முதலமைச்சரின் ஆணையைப் பெற்று அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, பொள்ளாச்சி அருகே ஒடையகுளம் பேரூராட்சி, வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி மற்றும் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் சபை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது பொதுமக்களிடம் அவர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Categories

Tech |