Categories
அரசியல்

தமிழ்நாடு கோரிக்கையை ஏற்ற கேரள அரசு…. பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்..!!!

முல்லைப் பெரியாரில் பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரளா அமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்திற்கு பயனளிக்கும். பேபி அணை மற்றும் மண் அணையை பலப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. இந்த அனுமதி மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு வலுப்படுத்த வழிவகுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |