Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000பேர் திரண்டுட்டோம்…! ஹிந்துக்களை தள்ளாதீங்க…. தமிழக அரசின் மீது எச்.ராஜா பாய்ச்சல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன் என்று அறநிலையத்துறை அமைச்சர் ஒவ்வொரு கோவில் முன்னாடியும் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட வேண்டும். தவறு செய்து விட்டேன் என்றும், சட்டவிரோதமாக நடந்து கொண்டேன் என்றும், ஹிந்து விரோதமாக நடந்து கொண்டேன் என்றும் கூற வேண்டும். நான் உண்மையைக் கூறுவதால் அவர் ஏதோ ஒன்று குரைக்கிறது என்று கூறுகிறார். மரியாதை இல்லாதவர் என்று சொல்கிறார்.

இது மாதிரி பேசலாமா? ஒரு மிக மோசமான ஹிந்து விரோதி கையில் இன்று இந்து கோவில்கள் இருக்கிறது. அதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஏழைகாத்த அம்மன் கோவிலை எடுப்பதை எதிர்த்து எப்படி 5,000 பேர் திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளை விரட்டி அடித்தார்களோ அதைப்போன்று ஒவ்வொரு ஊரிலும் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஹிந்து சமுதாயத்தை தள்ள வேண்டாம் என்று ஹிந்து விரோத திமுக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |