தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணைகளும் நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேட்டூர் அணை நாளை மாலைக்குள் நிரம்பும் என்பதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும்.எனவே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் குளிப்பதற்கு மற்றும் மற்ற செயல்களில் ஈடுபட செல்லக் கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.