கிராமத்திற்குள் புலி நுழைந்ததால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இவற்றில் புலி, சிறுத்தை போன்றவை கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை வேட்டையாடுகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே ஏற்கனவே நடந்து இருக்கின்றது. தாளவாடி அருகில் உள்ள பாரதிபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில் பழனிச்சாமியின் வீட்டு தோட்டத்திற்கு மர்ம விலங்கு ஒன்று வந்துள்ளது. அப்போது பழனிச்சாமியை கண்டதும் அந்த விலங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் தோட்டத்தில் பதிவாகியிருந்த கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் அது புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். இவ்வாறு கிராமத்திற்குள் புலி நுழைந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருகின்றனர்