Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, சேலம், தஞ்சை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, அரியலூர், திருச்சி மற்றும் நாகை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தொடர் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |