ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிஅரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
டி 20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ‘சூப்பர் 12 ‘சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன . இதையடுத்து குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .அதோடு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .
இதையடுத்து நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது .இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனிடையே 10-ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது .இதையடுத்து 11-ஆம் தேதி துபாயில் நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .