தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி எண்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.மேலும் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப தேவையான பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.