ஒரு நாள் மழைக்கே திமுக திண்டாடும் நிலையில் பெருமழைக்கு இவர்கள் எவ்வாறு தாக்கு பிடிப்பார்கள் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்தவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் நேரில் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒருநாள் மழைக்கே திமுக திண்டாடுகிறது. பெரு மழைக்கு எவ்வாறு தாக்குப் பிடிப்பார்கள் என விமர்சித்தார். மேலும் திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்