ஐக்கிய அரபு நாட்டின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1971 ஆம் ஆண்டு பிறந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவச ஷாப்பிங் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ஷாப்பிங் துபாய் மாகாணத்தில் செயல்படும் union coop ஹைப்பர் மார்க்கெட்டில் அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் அந்த மார்கெட்டிற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் Afdhal அட்டையை பயன்படுத்தி இலவசமாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.
இந்த இலவச ஷாப்பிங் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி முதல் 100 நாட்கள் வரை அமலில் இருக்கும் என்று நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த Afdhal அட்டையில் மதிப்பை அந்த மார்கெட் நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன்கள், 2 வது தேர்ந்தெடுக்கப்படும் 50 வாடிக்கையாளர்களுக்கு தங்க கட்டிகள், 3 வது தேர்ந்தெடுக்க்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு mountain bike மற்றும் 4 வது தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 50,000 Tamayaz புள்ளிகளும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் ஆயிரக்கணக்கான பொருட்களின் விலை மொத்தமாக ரூ.50 மில்லியன் அளவுக்கு குறைத்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன் பெற முடியும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உணவு பொருட்கள், மாமிசம் மற்றும் பழங்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.