விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன் பின் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.
இதை தொடர்ந்து இயக்குனர் சிவா நடிகர் சூர்யா படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிவா, தளபதி விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தில் சிவா ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் அப்போதிலிருந்தே விஜய்க்கும், தனக்கும் நல்ல நட்பு இருந்து வருவதாகவும் சிவா தெரிவித்துள்ளார்.