தீபாவளிக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்புவதை மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளனர். தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெளியூருக்கு சென்ற மக்கள் மூன்று நாட்களுக்கு சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.