கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் கனமழை பெய்து வரும் இடங்களில் நேரில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் சென்னையில் உள்ள நிவாரண மையங்களை தயார்நிலையில் வைப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
BREAKING: இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!
