Categories
அரசியல்

தவணைக் காலத்தில் ஆட்சி செய்யும் ஸ்டாலின்… டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய ஆட்சி செயல்பாடு என்பது ஆறுமாதம் தவணை காலம் போன்றது என்று விமர்சித்தார்.

ஈபிஎஸ் நான்கு கால் பிராணி போல் தவழ்ந்ததை அனைவரும் அறிவர். யாரால் முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். கொடநாடு கொலை வழக்கில் ஈபிஎஸ் மடியில் கனமில்லை என்றால், பயம் இல்லாமல் இருக்கலாம். தற்போது எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பலவீனமாக உள்ளார்” என்று விமர்சித்தார்.

Categories

Tech |