Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் புதிய படத்தை தொடங்கிய மெகாஸ்டார் சிரஞ்சீவி… வெளியான கலக்கல் புகைப்படங்கள்…!!!

நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 2008-ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் களமிறங்கினார். இதையடுத்து இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மேலும் கொரட்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சர்யா படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தற்போது இவர் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. பாபி இயக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |