தமிழகத்தில் பருவமழை தொடங்கி பல இடங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆற்று ஓரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறையினர் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கு தேவையான உடைகள், பேட்டரியால் இயங்கும் வானொலி, லைட், தேவையான மருந்துகள். உலர் உணவு மற்றும் மருந்து மாத்திரை ஆகியவைகள் அடங்கும் அவசரகால பெட்டக ஒன்றை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
இதனால் வெள்ளத்தின் போது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் சூழ்நிலை வந்தால் உயிரைப் பாதுகாப்பதற்காக இவைகள் அனைத்தும் உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை ஆகிய துறை அலுவலர்களிடம் தொலைபேசி எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வை தீயணைப்பு துறையினர் பொது மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.