ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 70% வேலைவாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் விதமாக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது 2022 ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலை பெற உத்தரவாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலமாக அதிகபட்சமாக மாதம் ரூ.50,000 சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குஜராத் மாநிலத்தில் 80%. மராட்டியம் 70%, ராஜஸ்தானில் 75%, ஆந்திராவில் 75% மத்தியபிரதேசம் 70% பணிகள் உள்ளூர் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.