Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள்,அந்தமான் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் மாநிலங்களுக்கு இடையே சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாக நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும்படி தென் மாநில முதல்-மந்திரிகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை ஒட்டி வருகின்ற 13, 14, 15ஆகிய தேதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |