தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் திரைப்படம் வெளியான 25 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை செய்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் இருந்தபோது 2 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் வாங்கி வந்துள்ளாராம். இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், சமூக வலைத்தளத்தில் ரசிகரால் பரபரப்பாக பேசப்படுகிறார்.