Categories
அரசியல்

பிற மாநிலங்கள் செய்யும்போது…. நீங்க மட்டும் ஏன் மௌனம் காக்கின்றீர்கள்…. அண்ணாமலை கேள்வி…!!!!

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை  ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் அதாவது பாஜக ஆட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு மட்டும் குறைக்காது ஏனென்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசே பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைத்து இருந்தபோதும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Categories

Tech |