கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த பந்தங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தினர்களின் குறை அகல முயற்சிகளை எடுப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் கொஞ்சம் தலைதூக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதமும் பிள்ளைகளின் செயலால் மனவருத்தமும் ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. உறவினர்களிடம் கோபமாக பேசாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
எதிர்பார்த்த தொகை கைக்கு வருவது, புதிய பதவி கிடைப்பது, சொத்து வழக்கில் வெற்றி கிடைப்பது போன்றவை இன்று நடக்கும். வீண் கவலைகள் மட்டும் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் சிறப்பாக செய்யுங்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். யாரிடமும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். தெய்வ நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனம் கொஞ்சம் அமைதியாக காணப்படும்.
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வம் வந்து சேரும். தயவுசெய்து இதை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்