ஆபாச வீடியோக்கள் தொடர்பான விவகாரத்தில் சிக்கிக் கொண்ட தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே டி ராகவன் தற்போது கேதார்நாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவை தொடர்ந்து தான் பதவி விலகுவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே அவர் தனது ராஜினாமாவை செய்தார். மேலும் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று அவர் தெரிவிக்க கட்சி மேலிடம் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கேதார்நாத்தில் பிரதமர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று இருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கே டி ராகவன் தனது அரசியல் செல்வாக்கை யாராலும் தடுக்க முடியாது என்பதை நிரூபித்து விட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.