Categories
மாநில செய்திகள்

தீபாவளி முடிஞ்சிருச்சு… ஊர் திரும்ப போறீங்களா?…. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டாலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர்.தற்போது தீபாவளி பண்டிகை முடித்து மக்கள் ஊர் திரும்ப வசதியாக சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு வருகின்ற எட்டாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று முதல் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து மக்கள் திரும்ப தொடங்கிவிட்டனர். அதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னைக்கு இயக்கக் கூடிய 2,100 பேருந்துகள் உடன் 4,319 சிறப்பு பேருந்துகளை எட்டாம் தேதி வரை இயக்க உள்ளனர். இதனைப் போலவே கோயம்புத்தூர்,திருப்பூர் மற்றும் மதுரை உட்பட பல்வேறு ஊர்களுக்கு ஐந்தாயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் எட்டாம் தேதி வரை மொத்தம் 17,719 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.நாளை மற்றும் நாளை மறுநாள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |