Categories
அரசியல்

பாட்டாளி சொந்தங்களே…. நேரம் வந்துருச்சு தயாராக இருங்க… தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்…!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் இதைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூகநீதிக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலை வைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. வன்னிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் வைத்த ஏழு வினாக்களும் எந்த இட ஒதுக்கீட்டுக்கு முன் வைத்தாலும் அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுக் கொடுத்தது நாம்தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் ஒதுக்கீடு கிடைக்க செய்ததும், வன்னியர்களுக்கு 10.50% சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்ததும் நாம்தான். சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக அடுத்த கட்ட அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டும். இதனால் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு  மட்டும் வீழ்த்தப்பட வில்லை.

எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. எனவே தமிழகத்தில் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியையும் நாம்தான் நிலை நிறுத்தப் போகிறோம். நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |