சென்னை மதுரவாயல் அருகே தொழிலதிபரின் துப்பாக்கி திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா. இவர் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தின் டீலர் ஆக உள்ளார். மேலும் தொழிலதிபரான இவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோபிகிருஷ்ணா பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது காரில் சென்று ஸ்வீட் வழங்கி வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய கோபிகிருஷ்ணா காரில் வைத்திருந்த அவருடைய கைத்துப்பாக்கி மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் காரிலும் வீட்டிலும் தொடர்ந்து தேடி வந்துள்ளார் ஆனால் துப்பாக்கி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மதுரவாயல் காவல் நிலையத்தில் தனது துப்பாக்கி தொலைந்து விட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் தொலைந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும் இதனால் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.