தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டு கடன் வட்டியை குறைத்துள்ளது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.55 விழுக்காட்டிலிருந்து 6.50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏற்கனவே வீட்டு கடன், கார் கடன் மற்றும் பர்சனல் லோன் என பல்வேறு கடன்களுக்கு சலுகைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு செப்டம்பர் 17ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி RLLR விகிதத்தை 6.80 விழுக்காட்டிலிருந்து 6.55 விழுக்காடாக குறைந்தது. இதையடுத்து நவம்பர் 8ஆம் தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6.50 சதவீதம் பட்டி முதல் வீட்டுக் கடன்களை வாங்கலாம். அதுமட்டுமல்லாமல் 6.65 சதவீதம் வட்டி முதல் கார் கடன்களை வாங்கலாம்.முன்பை விட அட்டகாசமான வட்டி விகிதத்தில் வங்கி சேவைகளை வழங்கி வருவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.