கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கனியம்பேட்டா கிராமத்தில் மிதுன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அமேசான் நிறுவனம் நவம்பர் 1ஆம் தேதி அன்று பாபுக்கு டெலிவரி செய்யதது. அந்த பார்சலை பிரித்து பார்த்த மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் வந்துள்ளது. இந்திய அரசால் வினியோகம் செய்யப்படும் பாஸ்போர்ட் அமேசானில் ஆடரில் எப்படி வந்தது தெரியாமல் குழப்பத்துடன் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் தெரிவித்த அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
அதனால் மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவரது என்று கண்டுபிடித்தார். அனைத்து தொடர்ந்து அந்த பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவரம் குறித்து பேசியபோது முகம்மது சலீமின் உண்மையான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.இதனையெடுத்து முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கி தனது பாஸ்போர்ட்டை வைத்துள்ளார்.
ஆனால் ஆர்டர் செய்த அந்த பாஸ்போர்ட் அவருக்கு பிடிக்காததால் அதனை திருப்பி அனுப்பியுள்ளார். சலீம் திருப்பி அனுப்பும்போது கவரில் வைத்து இருந்த பாஸ்போர்ட்டை அவர் எடுக்க மறந்து திருப்பி அனுப்பியுள்ளார். முகமது சலீமிடருந்து திருப்பி வந்த பாஸ்போர்ட் கவரை மறு சோதனை செய்யாமல் அமேசான் வணிக நிறுவனம் மீண்டும் அதே பாஸ்போர்ட் கவரை மிதுனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் சலீமின் உண்மையான பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த மிதுனிடம் சென்றுள்ளது என்று தெரியவந்தது.