Categories
தேசிய செய்திகள்

பணம் மற்றும் தங்கநகை கொள்ளை…. தப்பி ஓடிய கள்ளக்காதலன்….!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சென்னராயபட்டனாவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது ரம்யாவுக்கும் தனியார் நிறுவனத்தில் சக ஊழியராக பணியாற்றிய சென்னப்பனபுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜீ என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரம்யா கள்ளக்காதல் ராஜீவுடன் ஒன்றரை ஆண்டுகளாக சென்னபனப்புராவில் குடும்பம் நடத்தி பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ராஜீ ரம்யாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ரம்யா இருமுறை கர்ப்பமாகி உள்ளார். ஆனால் ராஜூ ரம்யாவிடம் தற்போது திருமணம் செய்ய கொண்ட வேண்டாம் என்று சில மாதங்கள் கழித்து செய்து கொள்வதாக கூறி கருக்கலைப்பு செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ரம்யா மற்றும் ராஜீ ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் அப்போது ராஜீ திடீரென ரம்யா வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் பணத்தை எடுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டார்.

அதன் பிறகு ரம்யா காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் ராஜீ இல்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரம்யா சாம்ராஜ்நகர் டவுன் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்து 15 நாட்களாகியும்  போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காததால் சென்னப்பனபுரா கிராம மக்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று ராஜீ மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |