போலி குறுந்தகவல் அனுப்பி பி.எஸ்.என்.எல் அதிகாரியின் வங்கியில் இருந்து நுதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஏஞ்சலோ நகரில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாத்யூ தனது செல்போனை பார்த்து கொண்டிருந்தபோது வங்கியின் பெயரில் ஒரு போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கு காலாவதியாக போவதாகவும், அதனை புதுப்பிக்குமாறும் இருந்துள்ளது. இதனையடுத்து வங்கியில் இருந்து வந்துள்ளதாக நினைத்த மாத்யூ குறுஞ்செய்தியில் உள்ள இணையத்தை திறந்து அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியுள்ளார்.
இதனையடுத்து வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு, ரகசிய எண் ஆகியவற்றை பூர்த்தி செய்தபின் ஒரு ரகசிய எண் அவரது எண்ணிற்கு வந்துள்ளது. அதையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின் சில நிமிடங்களிலேயே மாத்யூ வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த மாத்யூ உடனடியாக இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.