Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 உலகக் கோப்பையில் கலக்கும் ஹசரங்கா….! சக அணி வீரரின் சாதனையை முறியடித்து அசத்தல்…..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது .இறுதியாக 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து தோல்வியடைந்தது. இதனால்  20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது .இதில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இப்போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சாளர்  வனிந்து ஹசரங்கா 4 ஓவர் வீசி  19 ரன்கள் மட்டும்  விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இதன் மூலம் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் 16 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.  அதோடு ஒரு டி20 உலக கோப்பை சீசனில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் .இதற்கு முன்னதாக கடந்த 2012ல் நடந்த போட்டியில் இலங்கை வீரர் அஜந்தா மெண்டீஸ் 15 விக்கெட் கைப்பற்றியதே  சாதனையாக இருந்தது .தற்போது இந்த சாதனையை ஹசரங்கா முறியடித்துள்ளார்.

Categories

Tech |