கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதற்கு முன்னதாக அங்கன்வாடி மையங்கள் நவம்பர் எட்டாம் தேதி திறக்கப்படும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.100.58 ஆகவும், ரூ.85.01 ஆகவும் குறைந்துள்ளது .
மேலும் சமீப வாரங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசு ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி கர்நாடகாவில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவை கர்நாடக அரசு இன்று திரும்ப பெற்றது.இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு இன்றுடன் திரும்பப் பெறப்படுகிறது என்ற மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இருந்தாலும் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.