Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர்கள்…. முல்லை பெரியாறு அணை இன்று ஆய்வு….!!

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி மொத்த 13 மகுதுகளில் இருந்து 8 மகுதுகள் திறக்கபட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசு அனுமதி இல்லாமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ளமக்களின் குடிநீர் மற்றும் உணவு தேவையை முல்லை பெரியாறு அணை பூர்த்தி செய்து வருகிறது. தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அனையை கண்காணித்து, பராமரித்து மற்றும் இயக்கி வருகிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்நிலையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, மூர்த்தி மற்றும் சக்கரபாணி ஆகியோர்கள் முல்லைப் பெரியாறு அணையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

Categories

Tech |