Categories
சினிமா தமிழ் சினிமா

‘சாணிக் காயிதம்’ படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்நிலையில் சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதுகுறித்து சாம்.சி.எஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்த படத்தில் இணைவது பெருமையின் உச்சம். சாணிக் காயிதம் படக்குழுவினருடன் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |