தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக்கில் 431 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் டாஸ்மாக்கில் 437 ரூபாய் கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், கடந்த 3ஆம் தேதி 205.61 கோடி ரூபாய்க்கும், 4ஆம் தேதி 225.42 ரூபாய் கோடிக்கும், டாஸ்மாக்கில் மது விற்பனையாகி உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில் அதிகமாக மதுரை மண்டலம் 51.68 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலம் 47.57 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலம் 46.62 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலம் 79.84 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலம் 74.46 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது. மேலும் சென்ற ஆண்டு தீபாவளிக்கு 467.69 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 431.03 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.