மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புனித் மரணம் என்பது நடந்து இருக்க கூடாத ஒன்று. அவரது மரணத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.என்னுடைய குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்ப காலத்திலிருந்து நெருங்கிய நட்புடன் பழகி வருகிறது.நான் என் தாயின் வயிற்றில் நான்கு மாத கருவாக இருக்கும்போது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாயார் என்னிடம் கூறியுள்ளார்.
எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன வலிமையைக் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.