Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் லீக்கான ‘அண்ணாத்த’… அதிர்ச்சியில் படக்குழு…!!!

ரஜினியின் அண்ணாத்த படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சதீஷ், ஜெகபதி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று தியேட்டர்களில் இந்த படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Annaatthe first reviews out: Rajinikanth starrer excites fans, disappoints  buffs

இந்நிலையில் அண்ணாத்த படம் ரிலீஸான சில மணி நேரத்திலேயே மூவிரூல்ஸ், டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் திருட்டுத்தனமாக அண்ணாத்த படத்தை இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தடையை மீறி அண்ணாத்த படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |