தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என விஷால் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
. @VishalKOfficial about @actorvijay during FDFS of #Enemy at Rohini theatre pic.twitter.com/Z7MrpgCLHx
— Hari Vj Fanatic (@Vijayfanzh) November 4, 2021
இந்நிலையில் நேற்று எனிமி படத்தின் முதல் நாள் முதல் ஷோவின் போது நடிகர் விஷால் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் ‘எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான்’ என வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது விஷால் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .