உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது.ஆனால் கடந்த சில வாரங்களாக ஒரு சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது ரஷ்யா, சீனா,தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 3,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 409 பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சிங்கப்பூர் சுகாதாரத்துறை முழுவதுமாக கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட அரசு ஊழியர்கள் வரும் ஜனவரி 1 முதல் அலுவலகங்களுக்கு வருகை புரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 98 சதவீத மக்கள்தான் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதம் உள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. mRNA தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியாக தகுதி பெறாதவர்கள் mRNA அல்லாத சினோவாக் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.