தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெற்றது.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடந்தது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம்.இங்கு ஆறு மாத காலம் முதல் இரண்டு ஆண்டு வரை உள்ள தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டிற்கான முதல்கட்ட மாவட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் மீதமுள்ள சேர்க்கை காலி இடங்களை பூர்த்தி செய்ய நேரடி மாணவர்கள் சேர்க்கையானது அக்டோபர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுகுறித்த விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.