Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக படமாக்கப்படும் ‘புஷ்பா’ பாடல்… வெளியான செம அப்டேட்…!!!

புஷ்பா படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்ட புரம்லோ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் புஷ்பா திரைப்படம் உருவாகி வருகிறது. இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தை ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பஹத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் சில பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தின் ஒரு பாடல்  1000 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Categories

Tech |