Categories
தேசிய செய்திகள்

அபிநந்தனுக்கு பதவி உயர்வு…. “விங் கமாண்டர் டு குரூப் கேப்டன்” வெளியான தகவல்….!!

2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை வீழ்த்தினார். அதன்பிறகு அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட அவர் மார்ச் 1 அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இது இந்திய மக்களிடையே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் விங் கமாண்டர் ஆன அபிநந்தனுக்கு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியானது.

Categories

Tech |