ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கியது. ஆனால் சில ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணம் ஊடகம் மூலமாக வெளியானதை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது வழக்கின் விசாரணையை நடத்தியது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் பரபரப்புடன் காணப்பட்ட இந்த ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்று தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎஸ் கவுல், கே. எம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் பாஜகவினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.