ஜெய் பீம் ‘ படம் குறித்து யோகிபாபு ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் யோகிபாபு தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ”ஜெய்பீம்”. இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் யோகிபாபு ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”ஜெய் பீம்” ஒரு சிறந்த திரைப்படம். கடினமாக உழைத்த ஜெய்பீம் குழுவிற்கு வாழ்த்துக்கள்”. என பதிவிட்டுள்ளார்.