சிறுமிக்கு சொந்த தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் பூ கட்டும் தொழில் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு அவரது தந்தையே அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதற்கிடையே சிறுமியின் தாயார் ராமநாதபுரம் சூரக்கோட்டை அருகே உள்ள கொட்டகை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற பூசாரியிடம் அழைத்து சென்றுள்ளனர். அந்த பூசாரி சிறுமிக்கு பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் நீங்கிவிடும் என கூறியுள்ளார். இதை நம்பிய சிறுமியின் தாயாரும் பூசாரி கேட்ட பணத்தை கொடுத்து பரிகாரத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் பூசாரி சிவக்குமார் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அருகே கூரை கொட்டகை அமைத்து பரிகாரத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி அங்கு வரவழைத்து, அவரது தாய் மற்றும் உறவினர்களை வெளியே இருக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில் பூசாரி சிறுமிக்கு குடிப்பதற்காக குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார். மேலும் பூசாரி சிவக்குமாரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் தொல்லைகளை பொறுக்க முடியாமல் சிறுமி சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமிக்கு தந்தையும், பூசாரி சிவக்குமாரும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுமி தந்தையையும், பூசாரியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.