இயற்பியல் தொடர்பாக ஒரு தகுதி தேர்வில் இடம்பெற்ற சிக்கல் நிறைந்த கேள்விக்கு பதிலை கண்டுபிடிக்க ஒரு யூடியூபர் வித்தியாசமாக முயற்சி மேற்கொண்டிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டெரெக் முல்லர் என்ற நபர் Veritasium என்ற யூடியூப் சேனலை நடத்துகிறார். இவரின் சேனலுக்கு 10.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில், 2014 US Physics Olympiad team என்ற தகுதித்தேர்வில், ஹெலிகாப்டர் ஒன்று சீரான வேகத்தில் கிடைமட்டமாக பறந்து கொண்டிருக்கும் சமயத்தில், அதற்கு அடியில், ஒரு கேபிள் முழுமையாக தொங்கவிடப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர், காற்றில் பறக்கும் போது, அதன் கீழ் தொங்கும் கேபிள், கீழ்காணும் படங்களில் எந்த அமைப்பில் இருக்கும்.? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது.
இதற்கான சரியான பதிலை கண்டறிவதற்காக, டெரெக் முல்லர், ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து செயல்முறை சோதனையில் ஈடுபட்டார். அந்த வீடியோவையும் தன் சேனலில் வெளியிட்டிருக்கிறார். கேள்வியில் இருக்கும் படி, சரியான எடை கொண்ட கேபிள் ஒன்றை ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறக்கி பரிசோதிக்கிறார். அப்போது, optionB-யில் குறிப்பிடப்பட்டிருக்கும் படம் போன்று அந்த கேபிளின் அமைப்பு தெரிந்தது.
அதன் பின்பு, அடுத்த முயற்சியை செய்தார். கேபிளை மேல் நோக்கி தூக்கினார்.அதன்பின்பு, 20-பவுண்டு எடை உடைய கெட்டில்பெல்லை கேபிளுடன் சேர்த்து அதனை கீழே இறக்கினார். அது Option D போன்று இருந்தது. அதன்பிறகு, எடையில்லாத ஒரு நீலக் கொடியை சேர்த்தார்.
அதன்பிறகு, மீண்டும் கேபிளை கீழே இறக்கி பறக்க விட்டு பார்த்தார். அப்போதும், தகுந்த பதில் கிடைக்வில்லை. எனவே, பாராசூட் ஒன்றை கேபிளோடு சேர்த்து பறக்கச்செய்தார். இறுதியாக, கேபிளில் எந்த பொருள் இணைக்கப்படுகிறதோ, அதனை பொறுத்து பதில் மாறுகிறது என்று செய்முறை சோதனையில் தெளிவுப்படுத்தியிருக்கிறார் டெரெக் முல்லர்.